அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் மே 29, 30 ஆகிய தேதிகளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

29 ஆம் தேதி புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வடசென்னை, தென் சென்னை, சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்ட செயலாளர்கள் , பொறுப்பாளர்கள் கூட்டம் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!