மனம் திறந்து பேச போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுகவிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ஆட்சி அதிகாரிகள் ஏற முடியும் எனவும் தெரிவித்தார். அது மட்டுமல்லாது 2024-ல் பாஜகவோடு கூட்டணி அமைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் என்று சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் என பெயர் குறிப்பிடாமல், பொதுவாக விலகியவர்கள் என்று குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியிருந்தார்.
எந்த பொறுப்பும் தேவையில்லை என்கிறார்கள் என்றும் அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில் முக்கியமாக பார்க்கப்படுவது என்னவென்றால் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் தான் மனம் திறந்து பேசப் போவதாக அறிவித்த உடனேயே சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாது அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துக்கு ஓ பன்னீர் செல்வமும் வரவேற்பு தெரிவித்துள்ளார். யாருடைய தூண்டுதலின் பேரில் செங்கோட்டையின் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனமும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி சசிகலா வெளியிட்ட அறிக்கை வேகமாக பரவி வருகிறது. நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது., புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம்., கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து தம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உங்கள யாரு கூப்டா? இபிஎஸ் பத்தி முழுசா பேசியிருக்க வேணாவா? செங்கோட்டையனை கிழித்த புகழேந்தி
மனமாச்சர்யங்களை மறந்து கருந்து வேறுபாடுகளை கடந்து கட்சி முக்கியம், கட்சியின் நலன் முக்கியம் கட்சியின் எதிர்காலம் முக்கியம், கட்சியின் வெற்றி முக்கியம், அந்த வெற்றி திமுக என்ற தீய சக்தியை வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது என்று தெரிவித்து உள்ளார். எந்த திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் பாடுபட்டார்களோ, அந்த திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது. அதனால்தான் கழகம் ஒன்றுபடவேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன் என கூறியுள்ளார். செங்கோட்டையனை யாரோ இயக்குகிறார்கள் என்ற கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சசிகலாவின் பதிவு வைரலாகி வருகிறது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தான் ஒரு உண்மையான அதிமுக தொண்டர் என்பதை நிரூபித்து விட்டார் என்றும் செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளார் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்று பட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்து தான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டனின் கருத்து எனவும் அதிமுக ஒன்று பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கருத்து என்றும் இதைத்தான் தானும் வலியுறுத்துவதாக கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: சசிகலா உள்ளிட்டோரை அரவணையுங்கள்! பரபரக்கும் அரசியல் சூழலில் மனம் திறந்த செங்கோட்டையன்…