சிவகாசி- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க 20-ஆயிரம் அதிமுக நிர்வாகிகளுக்கு தபால் மூலம் அழைப்பு விடுத்துள்ள முன்னாள்அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!! என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் (ஆகஸ்ட்)7 மற்றும் 8-ந் தேதிகளில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி அதிமுக நிர்வாகிகளுடன், தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்டி வரவேற்பளிக்க அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகையையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசி, திருவில்லிபுத்தூர் ,ராஜபாளையம் , விருதுநகர் என 4- சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பூத் கமிட்டிநிர்வாகிகள், கிளைநிர்வாகிகள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் என சுமார் 20- ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தபால் மூலம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விடியா திமுக அரசு! கோவையில் வரும் 5 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்... அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒவ்வொருத்தருக்கும் தபால் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதால் அதிமுக நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து, விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள தங்களது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச் சாமியை வரவேற்க தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெ. முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜுவை கட்சியிலிருந்து நீக்குங்க... முன்னாள் எம்.பி ஆவேசம்..!