காரமடை நகராட்சி சந்தை கடை ஏலத்தில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதை கண்டித்தும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசு கண்டித்தும் கோவையில் வரும் ஐந்தாம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான 50 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ்க்கையை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி தராததால் மிகுந்த சிரமங்களை மக்கள் சந்தித்து வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
கோவை புறநகர் வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மின் மயானம் பல மாதங்களாக செயல்படவில்லை என்றும் தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சாக்கடைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக முன் வைத்துள்ளது.
இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் சரசரவென சரியும் எடப்பாடி பழனிசாமி மவுசு... ராமநாதபுரம் முக்குலத்தோர் ரவுசு...!

மேலும் கோவை புறநகர் வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து நகராட்சிக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியும், நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கோடும் இருந்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அத்தியவாசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 5.8.2025 செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அம்புட்டும் நடிப்பு.. நீலி கண்ணீர் வடிக்காதீங்க இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!