ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் வருகை தரும். எடப்பாடி பழனிசாமிக்கு முக்குலத்தோர் அமைப்புகள் வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவும் எதிர்ப்புகளால் அதிமுகவினர் அதிர்ச்சி
கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து முக்குலத்தோர் உள்ளிட்ட சீர்மரபினர், பழங்குடியினர் பட்டியலில் உள்ள பிற சமூகத்தினர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர்.
அதிமுகவின் இந்த முடிவு, மதுரையை மையமாக கொண்ட தென்மாவட்டங்கள். தஞ்சையை மையமாக கொண்ட டெல்டா மாவட்டங்க ளில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சுமார் 40 முதல் 45 தொகுதிகளில் அக்கட்சி தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தது இதே நிலை நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது.
இதையும் படிங்க: அம்புட்டும் நடிப்பு.. நீலி கண்ணீர் வடிக்காதீங்க இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!
தற்போது தமிழகத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பய ணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நடந்த கூட் டத்தில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண் டும் நிறைவேற்றி தருவேன் என அறிவித்தார். இது மீண்டும் முக்குலத்தோர் உட்பட சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ள 67 சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் தேர்தல் சுற்றுப் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வர உள்ள நிலையில் இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் மற்றும் முக்குலத்தோர் அமைப்புகள், முத்தரையர் சமூகம் உள்ளிட்ட பிற சமுகத்தினரும் எடப்பாடி வருகைக்கு எதிராக, முகநூல், இன்ஸ்டா, வாட்ஸ் அப் குரூப்கள் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களிலும் கண்டன போஸ்டர்களை பதிய விட்டு ஹேஷ்டேக் செய்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் எடப்பாடியின் வருகைக்கு எதிராக கண்டனம் வலுத்து வருவது, அதிமுக நிர்வாகி களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை ஆப்பநாடு மறவர் சங்கத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக உள்ள பகுதியான முதுகுளத்தூரில் நாளை மாலை பிரச்சாரம் செய்கிறார், இதனை அடுத்து கடலாடி சாயல்குடி வழியாக விளாத்திகுளம் செல்கிறார்.
இதையும் படிங்க: ஆவேசத்தில் முக்குலத்தோர் சமூகம்... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!