மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவி காலம் முடிவடையும் நிலையில் ஜூன் 9ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை வேட்பாளராக வழக்கறிஞர் இன்பதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநிலங்களவை தேர்தலில் முன்னாள் சபாநாயகர் தனபால் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போட்டோஷூட்- னா FULL MAKEUP ல வந்துடுவாரு... கூச்சமே இல்லையா? முதல்வர் மீது அதிமுக கடும் தாக்கு!

தேமுதிக கட்சி ராஜ்ய சபா சீட் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தேமுதிக உடனான கூட்டணி தொடர்வதாகவும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமலை வைத்து காய் நகர்த்தும் பிரேமலதா... எடப்பாடி பழனிசாமியின் பலே திட்டம்...!