வாக்கு சேகரிக்க வந்த சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளரிடம் அதிமுக தொண்டர் ஒருவர் சரமாரி கேள்வி எழுப்பினார். 20 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொகுதியில் தொடர்ந்து அதிமுக வெற்றிப்பெற செய்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களைப் பற்றி கண்டுகொள்ளவில்லை என்றும் இந்த முறை அதிமுகவிற்கு வாக்களிக்க முடியாது என்று வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளரிடம் பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோத் , தனது தொகுதிக்குட்பட்ட 49 வது கோட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை வழிமறித்த அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொகுதியில் அதிமுக-வை வெற்றிப்பெற வைத்தும் , சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான எந்த அடிப்படை தேவைகளையும் செய்து தரவில்லை என்று கூறிய அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் இந்த முறை அதிமுகவிற்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டோம் என்று கூறினர்.

அதிமுகவினருக்கு ஓட்டு கேட்க எந்த உரிமையும் இல்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தது அதிமுக வேட்பாளரிடம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிது இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!
இந்த தெற்கு தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக-வை சேர்ந்தவர்களே மாறி மாறி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த நிலையில் தற்போது பொதுமக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: “இனி 10 தோல்வி பழனிசாமி கிடையாது...” - புது பட்டப்பெயர் வைத்து இபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!