தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது தமிழக அரசியலில் ஏகபோகமாக இருந்த திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய ஒரு பெரிய மாற்றம்.
ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் தவெக 10 இடங்கள் பின்தங்கியிருப்பது, ஆட்சி அமைப்பு குறித்த சிக்கல்களை உருவாக்கியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 2 முறை விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தவெகவை காப்பாற்ற முடியாது என அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்தார். காங்கிரஸின் 5 இடங்களை சேர்த்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது என்றார்.
இதையும் படிங்க: திக்... திக்... திருப்பம்....!! - முக்கிய அஸ்திரத்தை கையில் எடுக்கப்போகும் விஜய்... திராவிட கட்சிகளுக்கு செம்ம ஷாக்...!
தவெக எனும் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் காங்கிரஸ் ஓட்டை போட்டுள்ளது என்றும் கூறினார். தவெக எனும் கப்பல் இன்னும் வேகமாக மூழ்க காங்கிரஸ் உதவுகிறது என்று தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!