சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்தார். தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயிரிழந்த அஜித்குமார் என்ன தீவிரவாதியா என்றும் அடித்துக் கொலை செய்துள்ளீர்கள் எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அஜித் குமார் மரணம் தொடர்பாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது, தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமார் துன்புறுத்தப்பட்டதாகவும், அஜித்குமார் உடல் எதற்காக மதுரை கொண்டுவரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அஜித் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி தெரிவித்தார். அஜித் மரணமடைந்த செய்தியை அவரது தாயிடம் சிவகங்கை மாவட்ட எஸ்பி. தான் கூறியதாகவும், அஜித் குமார் தாக்கப்பட்ட போது சிவகங்கை மாவட்ட எஸ். பி ஆசிஷ் ராவத் காவல் நிலையத்தில் இருந்ததாகவும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!

மேலும் அஜித் குமார் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நகை திருட்டு தொடர்பாக ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நகைகள் மாயமானது தொடர்பாக 28ஆம் தேதியே வடக்கு பதிவு செய்ததாகவும், நகை திருட்டு குறித்து புகார் வந்ததுமே சி எஸ் ஆர் போடப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி இதனை மறுத்தார்.

நேற்று இரவு தான் எஃப் ஐ ஆர் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதாக வாதிட்டார். மேலும், அஜித் குமார் தப்பியோட முயன்றதாக வழக்கம் போல் போலீசார் கதை கட்டுவதாகவும் தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அஜித் குமாரின் கஸ்டடி மரணத்தை மறைக்க திருப்புவனம் பேரூராட்சி தலைவர் வேங்கை மாறன் 50 லட்சம் ரூபாய் பேசப்பட்டதாகவும் பேசியதாகவும் வழக்கறிஞர் ஹென்றி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு ஒரு விரலா ஒடச்சாங்க.. தண்ணி கேட்டா செருப்பால அடிச்சாங்க! அஜித் கொலை குறித்த அதிர்ச்சி தகவல்..!