சிவகங்கையில் நகை திருட்டு சம்பவத்தில் விசாரணைக்காக அடைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அஜித் குமார் மரண வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளும் நீதிபதிகள் முன்வைத்தனர்.

தொடர்ந்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், கொடூரமான, மிருகத்தனமான கொலை என்றும் ஒரு மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்து விட்டதாக அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். அப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உரிய விசாரணை நடத்தப்படும் நிலவும் தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சித்திரவதை செஞ்சிருக்காங்க.. சுயாதீன நடவடிக்கை எடுங்க! மனித உரிமைகள் ஆணையத்துக்கு நயினார் முக்கிய கோரிக்கை..!
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித் குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். "சாரி மா" எனக்கூறி அஜித் குமார் தாயாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து இருந்தார். மேலும் அஜித் குமார் சகோதரருக்கு நிரந்தர வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்தார். அரசு வேலைக்கான ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார்.

இந்த சம்பவத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து உள்ளார். காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “சாரி மா" என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்ததாகவும்,. ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை இன்று கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், காவல்துறை பாதுகாப்பில் இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுக ஆட்சியில் காவல் நிலையங்களிலும் காவல்துறை பாதுகாப்பிலும் இருந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் இறந்தவர்களின் 23 பேர் பெயர் பட்டியலை வெளியிட்ட நயினார் நாகேந்திரன், இவர்களது பெற்றோரிடமும், மனைவி மக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும் என்ற கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!