நாளை திருச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் வருகை தர உள்ளனர். இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது. 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமித் ஷா டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பிப்ரவரி 13-ஆம் தேதி ( நாளை) திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைவார். அவருடன் பியூஷ் கோயலும் இணைந்து வருகிறார். திருச்சியில் அவர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள்.

வருகைக்குப் பிறகு அமித் ஷா திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுப்பார். இந்த இரண்டு நாள் பயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிப்ரவரி 14-ஆம் தேதி காரைக்காலில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டம். அங்கு அமித் ஷா மக்களை நேரடியாக சந்தித்து உரையாற்ற உள்ளார். காரைக்கால் செல்ல ஹெலிகாப்டர் மூலம் திருச்சியிலிருந்து பயணம் மேற்கொள்வார்.
இதையும் படிங்க: த.மா.கா. தனிச் சின்னத்தில் போட்டி..! பியூஷ் கோயலுடன் ஆலோசித்த பிறகு ஜி.கே. வாசன் அறிவிப்பு..!
கூட்டம் முடிந்ததும் மீண்டும் திருச்சிக்கு திரும்பி, அங்கிருந்து சேலம் நோக்கி புறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேலத்தில் தமிழ்நாடு பாஜகவின் கோர் கமிட்டி கூட்டத்தை தலைமை தாங்கி நடத்த உள்ளார். பியூஷ் கோயல் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால், இந்தப் பயணத்தில் அமித் ஷாவுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உட்பட ஏராளமான பாஜக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் NDA கூட்டணிக்கு எடப்பாடி தலைமை… ஊழல் மட்டுமே திமுக சாதனை..! EPS, பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி..!