தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த முடிவுகளை அறிவிக்கிறது.இந்த ஆண்டு தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றன. சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். மதிப்பீட்டுப் பணிகள் முடிவடைந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று முடிவுகள் வெளியாகின்றன.
இந்த ஆண்டு தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றன. சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பொதுத் தேர்வில் பங்கேற்றுள்ளனர். தேர்வு முடிவுகளுக்குப் பின் மதிப்பீட்டுப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, திட்டமிட்டபடி இன்று முடிவுகள் வெளியாக உள்ளன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சுகாதாரத்துறை சவால்கள்..? CM விஜய் தலைமையில் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் பார்க்கலாம். முடிவு அறிவிக்கப்பட்டவுடன் இணையதளத்தில் SSLC Result 2026 என்ற லிங்க் செயல்படுத்தப்படும். மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, கேப்ட்சா கோடை நிரப்பி உள்நுழைய வேண்டும். முடிவுத் தாளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் முன்னாள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்தியுள்ளார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் இது உங்களுக்கான Result மட்டுமல்ல ஆசிரியப் பெருமக்களின் கற்பித்தல் செயல்பாடு எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது?., தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?., என எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான Result-தான் இது என்றும் கூறினார். ஆகவே பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: PM SHRI திட்டத்துக்கு அனுமதியா..? கொள்கையில் சமரசமா..? அமைச்சர் ராஜ்மோகன் பளீச் பதில்..!