10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளதாக தெரிவித்தார். பதினோராம் வகுப்பு அறிவியல் தேர்வு மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் இரண்டாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் ஆறாம் தேதி தொடங்கி மார்க் 26 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என அன்பில் மகேஷ் அறிவித்தார். மே இருபதாம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு நாளைக்கு 40 முதல் 50 வீடுகள் டார்கெட்! ஒருவாரம், 10 நாளில் முடிஞ்சிடும்! SIR வியூகம் இதுதான்!
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் 8.70 லட்சம் பேர் பொது தேர்வு எழுத உள்ளதாக கூறினார். பன்னிரண்டாம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார். பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
 
இதையும் படிங்க: ஓமன் அரசின் புது ரூல்..!! சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற தடை.. வெளியேறி மீண்டும் வந்து புதுப்பிக்கலாம்..!!