அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது. சமரச உடன்பாடு எட்டப்படும் என்று நினைத்த நிலையில் சண்டை ஓய்ந்த பாடில்லை. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆலோசனைகளை மேற்கொள்வது பொறுப்பாளர்கள் நியமிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அன்புமணி அணி சார்பில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்ட பாமக பொதுக்குழுவில் எம்.எல். ஏ அருள் பங்கேற்கவில்லை. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூட்டம் முடிந்தவுடன் எம்எல்ஏ அருள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல் ஜி கே மணியும் அன்றைய தினம் உடல் நல குறைவால் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க: MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
இருவர் மீதும் அன்புமணி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைமை குறித்து அவதூறு பரப்பியதாகவும் கூறி எம்எல்ஏ அருளை கட்சியிலிருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அருள் விளக்கமளித்த போதிலும் சபாநாயகர் இடம் அன்புமணி ஆதரவை எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து அருளை மிகக் கோரி கடிதம் அளித்தனர். பாமகவின் கொறடா பதவியில் இருந்த அருளை நீக்கிவிட்டு மயிலம் சட்டமன்ற தொகுதியை சிவகுமாரை புதிய கொறடாவாக நியமித்திருப்பதாக வழக்கறிஞர் பாலு நேற்று அறிவித்தார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் இருவரும் இணைந்து பணியாற்றுவதே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு சக்திகளும் ஒன்று சேர்ந்தால்தான் வலிமையாக இருக்கும் என்றும் இல்லையெனில் நலிவை தான் ஏற்படுத்தும் எனவும் கூறினார். இந்த பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என தெரிவித்தார். கேள்வி, பதில்கள் கொடுப்பதை விட தீர்வு காண்பதே சிறந்தது என்று கூறிய ஜிகே மணி, எந்த கட்சியையும் நாம் குற்றம் சொல்ல கூடாது, நமது கட்சியில் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் யார் தலையிட்டாலும் எடுபடாது எனக் கூறினார்.

மாற்றுக் கட்சியில் சொன்னால் கூட அப்படி ஏற்றுக் கொள்வோமா என்ன என கேள்வி எழுப்பிய ஜிகே மணி, இந்த பிளவுக்கு எந்த கட்சிகளும் காரணம் இல்லை என்றும் இருவரும் ஒன்று சேர்வதே தீர்வு எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பாமகவில் இருந்து அருள் நீக்கம்... அன்புமணி அதிரடி உத்தரவு... அதிருப்தியில் தொண்டர்கள்