2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். பாமக 2 துருவங்களாக பிரிந்த நிலையில் ராமதாசும், அன்புமணியும் தனித்தனியாக கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25-ஆம் தேதி முதல் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா மாநிலம், வளர்ச்சிக்கான உரிமை மீட்பு, நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை, மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன தான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் மக்கள் உரிமை மீட்பு பயணத்திற்கான நற்றினை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான லட்சினையை குறிப்பிட்டு பேசிய அன்புமணி ராமதாஸ், இந்த பயணத்திற்காக ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்களுடன் ஸ்டாலின் இல்ல! ஊழலுடன் ஸ்டாலின் தான்... லெப்ட் ரைட் வாங்கிய அன்புமணி..!
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. அன்புமணி சுற்றுப்பயணம்..! முழு விவரம் வெளியீடு..!