உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் லஞ்சம் பெறுவதாக குறிப்பிட்டு அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக கூறி இது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா அல்லது ஊடலுடன் ஸ்டாலின் முகாம்களா என கேள்வி எழுப்பினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழக்கறிஞர் ஒருவர் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்ததாக தெரிகிறது. அவரிடம் நகராட்சி ஊழியர் லஞ்சம் கொடுக்க சொல்லி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கூறி விண்ணப்பித்த வழக்கறிஞர் ஒருவரிடம் நகராட்சி ஊழியர் ரகுபதி என்பவர் கையூட்டு கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் திமுக ஆட்சியில் எங்கும் கையூட்டு எதிலும் கையூட்டு என்ற சூழல் நிலவுவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார். அரசு ஊழியர் லஞ்சம் கேட்டிருப்பது எந்த வகையிலும் அதிர்ச்சி அளிக்கவில்லை என்று கூறிய அவர் தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுக ஆட்சி என்பதை மீண்டும் ஒருமுறை இது உறுதி செய்திருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. அன்புமணி சுற்றுப்பயணம்..! முழு விவரம் வெளியீடு..!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அரசு அலுவலகங்களில் இயல்பாக வழங்கப்பட வேண்டிய சேவைகளை முகாம்களை நடத்தி காலதாமதமாக வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்று முதலில் இருந்தே தன் குற்றம் சாட்டி வருவதாகவும், குறைந்தபட்சம் இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது லஞ்சம் வாங்காமலாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ஆனால் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த ஒருவரின் மனதில் இருந்த அலைபேசி எண்ணை எடுத்து தொடர்பு கொண்டு லஞ்சம் வழங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், தமிழக அரசால் நடத்தப்படுவது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா அல்லது ஊழலுடன் ஸ்டாலின் முகாம்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி.. பாமகவினர் மீது அடுத்தடுத்து பாய்ந்தது 3 வழக்குகள்..!