ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரேநாளில் வெறிநாய் கடித்ததில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் காயம். ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்து காயமடைந்த 11 பேர்கள் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி வாரச்சந்தை நாள் என்பதால் நகர் முழுவதும் அதிகப்படியான மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மாலையில் ஆண்டிப்பட்டி வாரச்சந்தை மெயின்ரோடு மற்றும் தெருப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் பலரையும் கடித்தது.
வெறிநாய் கடித்ததில் காயமடைந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர்கள் சக்தி, முத்துஹரிஷ், ராமர், முத்து, தேவதர்ஷினி, தாட்ஷாயிணி, நாச்சியார்புரம் பாக்யராஜ், பிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராணி, வைகைபுதூரைச் சேர்ந்த செல்வ பிரியா, ஆவாரம்பட்டியை சேர்ந்த வேல்முருகன், ஏத்தக்கோயிலை சேர்ந்த வாசிநாதன், ஆகியோர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் இன்று மயிலாடுதுறை பயணம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
ஆண்டிப்பட்டியில் வெறிநாய் கடித்து 11 பேர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஒரு லட்சம் கோடி ஒரேயடியாய் போச்சு... அமெரிக்காவிற்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா...!