இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியைப் பேணும் முக்கிய அமைப்பாக அங்கன்வாடி மையங்கள் அறியப்படுகின்றன. 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) கீழ் இயங்கும் இந்த மையங்கள், லட்சக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன. அங்கன்வாடி ஊழியர்கள் பணியின் சாரமாக, 0-6 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு, தடுப்பூசி, ஆரோக்கிய பரிசோதனை மற்றும் தாய்மார்களுக்கான ஆலோசனை ஆகியவற்றை வழங்குகின்றனர்.
இது மட்டுமல்லாமல், தேர்தல் கணக்கெடுப்புகள், சமூக ஆய்வுகள், பிறப்பு-இறப்பு பதிவுகள் போன்ற அரசு பணிகளையும் அவர்கள் செய்கின்றனர். இவர்களுக்கான ஊதியம் குறைவு என்று கருதுகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் குறைந்த ஊதியத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் SIR விவகாரம்..!! 2வது நாளாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!! நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு..!!
போலீசாரிடம் அங்கன்வாடி ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக கைது செய்து உள்ளனர். ஓய்வூதியமாக 6 750 ரூபாய் வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அராஜகம் செய்யும் தேர்தல் ஆணையம்..!! டெல்லிக்கு போகும் பாமக..!! களமிறங்கிய ராமதாஸ்..!!