பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை பாரிமுனை குறளகம் முதல் கோட்டை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். குறளகம் வருகைக்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்தே போலீசார் அவர்களை கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு, சமூக நீதி..! எல்லோருக்குமான தேர்தல் அறிக்கை வரும்... கனிமொழி MP உறுதி
இந்த நிலையில், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா அறிவாலயம் என்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணா அறிவாலயத்தின் நுழைவு வாயிலில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜன.1 முதல்.. அனைத்து டூவீலர்களுக்கும் இது கட்டாயம் இருக்கணுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!