தமிழக பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நெல்லையில் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு முதலில் ஆகஸ்ட் 17 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் மறைவு காரணமாக ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாநாடு தென் மாவட்டங்களில் பாஜகவின் தொண்டர்களை திரட்டுவதற்கும், கட்சியின் அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும் ஒரு முக்கிய தளமாக அமையவுள்ளது.
இந்த பூத் கமிட்டி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டுள்ளார். நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவது பாஜகவின் கடமை என்று கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வராக்குவது நம்முடைய கடமை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெற்றி வியூகம் வகுக்க நெல்லை வரும் அமித் ஷா!! சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழக அரசுக்கு பெருமை சேர்த்து வருவதாக கூறினார். முதலமைச்சருக்கு எதைப் பார்த்தாலும் பயம் வந்துவிட்டது என்று கூறினார். போரில் முன்னால் நின்று போரிடும் படைத்தலைவர்களை போல பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அடுத்த எட்டு மாத காலம் உழைக்க வேண்டிய பொறுப்பு பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார் புதிய கல்விக் கொள்கை, பி எம் ஸ்ரீ என எதிர்பார்த்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார் என்று தெரிவித்தார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் 8 மாத உழைப்பின் ஊதியமாக ஏன்டிஏ கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: தரங்கெட்ட அரசியல்! இதையே உங்களுக்கு பண்ணா மூஞ்ச எங்க வெச்சுப்பீங்க ஸ்டாலின்? அண்ணாமலை சாடல்..!