நெல்லையில் வருமானத்திற்கு அதிகமாக 70 சதவீதம் சொத்து சேர்த்ததாக ஊராட்சி செயலாளர் வீட்டில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் டார்லிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி வயது 45. இவர் தற்பொழுது நெல்லை முன்னீர்பள்ளத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019 இல் இருந்து 2024 வரை சீவலப்பேரி ஊராட்சி மற்றும் ரெட்டியார்பட்டி ஊராட்சிகளில் செயலாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 70 சதவீதம் சொத்து சேர்த்ததாக முத்துக்குட்டி மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை முதல் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான காவல்துறையினர் நெல்லை கே டி சி நகர் டார்லிங் நகர் பகுதியில் உள்ள முத்துக்குட்டியின் வீடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் ஊராட்சி செயலாளர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவிலிருந்து விலகியவர்களுக்கு தவெகவில் வாய்ப்பு... சட்டென மாறிய புதுவை முதல்வர் ரங்கசாமி ரியாக்ஷன்..!
முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்குமா அல்லது வேறு ஏதேனும் ஆவணங்கள் சிக்குமா என்பது குறித்து தீவிரமாக வீட்டில் இருந்த முத்துக்குட்டியின் குடும்ப உறுப்பினர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 நாட்களுக்கு சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்!! மக்களே உஷார்! வானிலை மையம் அப்டேட்!