ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஏ 3 குற்றவாளியான அஸ்வத்தாமனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி வரை அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அப்பாவை பாக்கணும்... ரவுடி நாகேந்திரன் இறுதிச் சடங்கில் பங்கேற்க மகன் அவசர முறையீடு...!
தந்தையின் மரணத்தை தொடர்ந்து நிகழ்ச்சிகள் பங்கேற்க வேண்டும் என அஸ்வத்தாமன் மனு தாக்கல் செய்ததால் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சதீஷ் மற்றும் ஹரிஹரன் ஆகிய இரண்டு பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்...!