தக்ஷிணாயன காலத்தில் வரும் 'ஆவணி அவிட்டம்' என்பது ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம்.
ஆவணி அவிட்டநாள் வேதங்கள் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுவதுண்டு. பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பிராமண குலத்தவர்கள் இந்த நாளில் நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
இதனிடையே, திருத்தணி முருகன் கோயில் ஆவணி அவிட்டம் முன்னிட்டு சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி இல்லை கோயில் நிர்வாகம்அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமிதிருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்றும் அண்டை மாநிலம் ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காங்கிரஸ் தினத்திற்கு வருகின்றனர் இந்த நிலையில்
இதையும் படிங்க: இந்தியாவில் நடக்குமா குவாட் மாநாடு!! அமெரிக்கா வரி விதிப்பால் சந்தேகம்!! ஜி 20 மாநாடு அதோகதி..!
ஆகஸ்ட்- 9 தேதி சனிக்கிழமை அதிகாலை 4:00 மணி அளவில் மூலவர் முருகப்பெருமானுக்கு கால சந்தி பூஜை பவித்ர உற்சவம் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் தீப ஆராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் தொடர்ந்து செய்யலாம் என்றும், மேலும் நண்பகல் 12.00 மணிக்கு முதல் மாலை 3:30 மணி வரை திருக்கோயில் ஆவணி அவிட்டம் முன்னிட்டு பூணூல் மற்றும் நிகழ்வு கோயில் குருக்கள் நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் திருக்கோயில் நடைசாத்தப்படும்நேரத்தில் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர். மாலை 3:30 மணிக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எத்தனால் கலந்த பெட்ரோல்.. எந்த வாகனத்திற்கும் பாதிப்பில்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் நிதின் கட்கரி..!!