கேரளாவில் ஐயப்ப வழிபாடு மிக முக்கியமான ஆன்மீக மரபாகும். சபரிமலை ஐயப்பன் கோயில், இந்தியா முழுவதிலுமிருந்து, குறிப்பாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. ஐயப்ப பக்தர்கள் மாநாடு, பக்தர்களை ஒருங்கிணைத்து, ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பது, சபரிமலை யாத்திரையை மேம்படுத்துவது மற்றும் பக்தர்களின் நலன்களை முன்னெடுப்பது போன்ற குறிக்கோள்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு, கேரளாவில் உள்ள முக்கிய ஆன்மீக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். 2025 ஆம் ஆண்டு இந்த மாநாடு கேரளாவில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது,
இந்தப் பக்தர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆண்டும் இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பாசாங்குத்தனம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இந்து மதத்தில் இருந்து எந்த அழைப்பையும் அவர் ஏற்கவில்லை என்றும் அவர்கள் மீண்டும் மீண்டும் ஹிந்து உணர்வுகளை அவமதிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் துணியை உருவி ஓட விட்டு இருப்பாங்க! அநாகரிகமாக விமர்சித்த DMK எம்எல்ஏக்கள்…
ஸ்டாலின் மகன் சனாதன தர்மம் ஒரு வைரஸ் போன்றது என்றும் டெங்கு போல நசுக்க வேண்டும் என்றும் கூறுகிறார் என சுட்டிக்காட்டிய தமிழிசை, ஸ்டாலின் எந்த கோவிலுக்கும் செல்லவில்லை என்றும் தமிழகத்தில் 35 ஆயிரம் மேற்பட்ட கோவில்களில் இருப்பதாகவும், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்டாலினை பற்றி அறியாதவராக இருக்கலாம்., ஆனால் அவர் எப்படி அழைப்பை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார். ஸ்டாலினுக்கு ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது மிக உயர்ந்த பாசாங்குத்தனம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: WHAT BRO… அடக்கி வாசிங்க BRO…. மதுரை முழுவதும் விஜயை கண்டித்து போஸ்டர்கள்!