சென்னை சின்ன நீலாங்கரையில் கட்டப்பட்டுள்ள புதிய மீனவர் வலை பின்னும் கூடத்தில், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திருநீறு மற்றும் ருத்ராட்சத்துடன் கூடிய பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பதை வரவேற்றுத் தமிழ்நாடு அரசுக்குப் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த கால திமுக ஆட்சியில் இந்து சமயத்தின் தொன்மையான அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவும், சனாதன தர்மக் கோட்பாடுகள் தொடர்ந்து இழிவாகப் பேசப்பட்டு வந்ததாகவும் விமர்சித்தார். ஆனால், தற்போது இந்து மதத்தின் பாரம்பரிய மற்றும் ஆன்மிக அடையாளங்கள் மீண்டும் பழமையான தோற்றங்களுடன் உயிர்பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கல்விக்கூடங்களில் சாதிவெறி.! டாட் வைக்குமா அரசு.? வானதி சீனிவாசன் ஆதங்கம்.!!

மேலும், தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில், விஜயவாடா கனகதுர்க்கை கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு நேரில் சென்று ஆன்மிக வழிபாடு நடத்தி வரும் முதலமைச்சர் விஜய், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் வரலாற்று மரபினைப் பின்பற்றிப் பழமையான தீபத் தூணில் முறைப்படி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: “திமுகவுக்கு சளைத்தது இல்லை தவெக”..! வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதை..! வானதி சீனிவாசன் விமர்சனம்..!!