சிங்கார சென்னை என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டாலும், சென்னையின் முக்கியமான இடமே மெரினா கடற்கரை தான். அத்தகைய உலக அளவில் பெரிய கடற்கரையான மெரினாவுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தின் முக்கிய கடற்கரைகளுக்கு 'நீலக்கொடி' (Blue Flag) சான்றிதழ் பெற தேவையான உட்டகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கும் மிக முக்கியமான அங்கீகாரமே இந்த நீலக்கொடி சான்றிதழ் தான். ஒரு கடற்கரையின் தூய்மை, சுத்தமான மணல், சுற்றுச்சூழல் மேலாண்மை பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலை உள்ளிட்ட சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கையைப் பிடித்த மோடி; நெகிழ்ந்து போன ஸ்டாலின்... 10 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?

அந்த வகையில், இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு மேலும் 4 கடற்கரைகளுக்கு சான்றிதழ் பெற நடவடிக்கை எடுத்து வந்தது.

சென்னை மெரினா கடற்கரை ரூ.6 கோடி, கடலூர் சில்வர் கடற்கரை ரூ.4 கோடி, நாகை காமேஸ்வரம் கடற்கரை ரூ.4 கோடி, ராமநாதபுரம் அரியமான் கடற்கரை ரூ.4 கோடி என மொத்தம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் உட்டகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் நான்கு கடற்கரைகளிலும் நடைபாதை, கண்காணிப்பு கோபுரம், மிதிவண்டி தடம் உள்ளிட்டவை அமைத்த பின்பு நீலக்கொடி சான்று கிடைக்க உள்ளது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.

இந்த நீலக்கொடி அங்கீகாரம் பெறும் கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பெரும்பான்மையான நாடுகள் நீலக்கொடி சான்றிதழை பெற முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துணை முதல்வர் பங்கேற்ற கூட்டத்திலேயே கைவரிசை.. பணத்தை இழந்து கதறும் தம்பதி..!