சமீப காலமாக அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடுகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும். தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அது புரளி என்பது தெரியவரும்.
அப்படியாக இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் காலனியில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்படாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய இளைஞர் ஒருவர் முதலமைச்சர் டிஸ்டார்ஜ் ஆகும் நிலையில் அவரது வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி செல்போனை துண்டித்தார். அவர் அழைத்த நம்பரை வைத்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சரின் வீடு உள்ள சித்தரஞ்சன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: அமிர்தசரஸ் கோவில் சுக்குநூறாகிடும்..! மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!
இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைப் போலவே, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்த நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மேல நம்பிக்கை இருக்கு! விரைவில் நல்ல முடிவு வரும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை