பரமக்குடி அருகே இலந்தைகுளம் என்ற இடத்தில் கார் மோதியதில் டூவீலரில் சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன், 50,. பூவேந்திரன்,70,. இருவரும் இன்று காலை டூவீலரில் கரும்பு வெட்டும் வேலக்கு மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு சென்றனர்.
அப்போது மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இலந்தைகுளம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் மாநாட்டின் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து… அப்பளம் போல் நொறுங்கிய கார்!
காரில் இருந்த இருவருக்கு லேசானம் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
விபத்து காரணமாக மதுரை - பரமக்குடி நான்கு வழிசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார் மோதி டூவீலரில் சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 40 பேரின் கதி என்ன..?? தேடும் பணி தீவிரம்..!!