நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தந்தையான உதவி சார்பு காவல் ஆய்வாளர் சரவணனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில் 3வதாக இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபாலனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: “இனி மேல் இதுமாதிரி நடக்கக்கூடாது...” - கவின் குடும்பத்தின் கண்ணீரைப் பார்த்து ஆவேசமான நயினார் நாகேந்திரன்...!
தற்போது இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை உதவி சார்பு ஆய்வாளர் சரவணன், சுர்ஜித்தின் உறவினரான சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளனர்.
இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி மூவருக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மீண்டும் காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டு செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை விசாரணை அடிப்படையில் திரட்டிய காவல்துறையினர் விரைவில் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்து அதற்குரிய பணியை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய கவின் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் கைது - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!