நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஜூலை 28 இறந்த கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிணவரையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பைக் மீது லாரி மோதி கோர விபத்து - மாமனார், மருமகன் பரிதாபமாக பலி...!
நேற்றும் காவல்துறையின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கவினின் உறவினர்கள் இன்று 3வது நாளாக உடலை வாங்க மறுப்பு தெரிவித்து சொந்த ஊரிலேயே இருக்கின்றனர். இதையடுத்து நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளி சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது. எத்தனை நாட்களாக கவின் உடன் சுர்ஜித் பேசிவந்துள்ளார். காதல் விவகாரம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து எல்லாம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக தற்போது நெல்லை மாநகர காவல் துறையினர் சார்பில் சிறையில் அடைக்கப்பட்ட சுர்ஜித்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நெல்லை மாவட்டம் முதலாவது நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து பல தரப்பினரும் கவினின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒரே கோரிக்கையாக சுர்ஜித் பெற்றோர்களான இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் நீண்ட ஆலோசனைக்குப் பின் தற்போது ஆணவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தந்தையான காவல் உதவி சார்பு ஆய்வாளர் சரவணனை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவரது உடலை பரிசோதனை செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்த பின் நெல்லை மாவட்ட 1வது நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி சத்யா சரவணன் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சரவணன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி மரணம் - பேரதிர்ச்சியில் கணவர்...!