இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்றால் 2021ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட பணி, இறுதியாக 2026-27ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. உலகின் மிகப் பெரிய இந்த கணக்கெடுப்பு முதன் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. மொபைல் ஆப் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், சுய கணக்கெடுப்பு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமான வீடு பட்டியலிடல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு நாடு முழுவதும் படிப்படியாக நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம், மக்கள் தொகை, வீட்டு வசதி, அடிப்படை வசதிகள், சொத்துகள் மற்றும் பிற சமூக-பொருளாதார விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்வதாகும்.

இந்தத் தரவுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டமிடல், கொள்கை வகுப்பு, இட ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கு அடிப்படையாக அமையும். தமிழகத்தில் கணக்கெடுப்புதமிழ்நாட்டில் சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: “நல்லா வருது.. வேணான்னு பாக்குறேன்”..! நாங்க கோட் சூட் போட கூடாதா..? திருச்சியை அலறவிட்ட முதல்வர் விஜய்..!
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் 30 வரை வீடு வீடாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வீடு பட்டியலிடல் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்தப் பணியில், எணுமரேட்டர்கள் மொபைல் ஆப் வழியாக தரவுகளைப் பதிவு செய்வார்கள். மக்கள் தங்கள் விவரங்களை se.census.gov.in என்ற இணையதளம் வழியாகவும் சுயமாக பதிவு செய்யலாம்.
இதையும் படிங்க: "நன்றி சொல்ல வந்தேன்"... திருச்சி கிழக்கு மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!