காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. இது அடையார் ஆற்றின் மூலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஆதாரமாகவும் இருக்கிறது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3.645 டி.எம்.சி ஆகும். ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது. கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மூன்றாவது முறையாக இன்று உபரி நீரானது திறக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் அது 500 அடியாக கன அடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இன்று காலை ஏரியின் பாதுகாப்பு கருதி அது 750 கன அடியாக உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்மரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 2100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 1,980 கன அடியாக குறைந்துள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 22.20 மில்லிமீட்டர் மலை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு அதாவது ஏரியின் உயரம் 24 அடி தற்பொழுது 21.27 அடியாக நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த டிஎம்சி 3,645 டிஎம்சியில் தற்பொழுது 2,926 டிஎம்சி நீர் இருப்பாக உள்ளது.
இதையும் படிங்க: சூதானமா இருங்க மக்களே... 3வது நாளாக பாய்ந்து வரும் வெள்ளம்... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 2,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 1,980 கன அடி நீர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் 500 கன அடியிலிருந்து தற்போது 750 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழை குறைந்தாலும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், நேமம், பிள்ளைப்பாக்கம், உரகடம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதாலும், தொடர்ந்து கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டிருக்கின்ற காரணத்தாலும் நீரின் அளவு 500 கன அடியிலிருந்து தற்போது 750 கணடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உபரி செல்லக்கூடிய வழிதடங்களான குன்றத்தூர், திருமுடிவாக்கம், மழுதலம்பேடு, காவலூர் அடையாரை கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...!