• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2.10 கோடி மதிப்புடைய தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 25 Oct 2026 21:23:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Airport Customs Seizes 1.65 kg Gold Paste Worth ₹2.10 Cr from Singapore Passengers.

    சிங்கப்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் ₹2.10 கோடி மதிப்பிலான 1.65 கிலோ 24 கேரட் தங்கப் பசையைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த இரண்டு கடத்தல் பயணிகளைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குத் தனியார் பயணிகள் விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாகச் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் பிரிவு அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் சென்னை சர்வதேச முனையத்தில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை வரிசையாகக் கண்காணித்தபோது, சுற்றுலாப் பயணிகளாகச் சென்றுவிட்டுத் திரும்பிய சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

    Chennai airport

    அவர்களை இடைமறித்து விசாரித்தபோது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், தங்களிடம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு கிரீன் சேனல் (Green Channel) வழியாக அவசரமாக வெளியேற முயன்றனர். சந்தேகம் வலுத்ததைத் தொடர்ந்து, அவர்களைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று உடைமைகளை முழுமையாகச் சோதனையிட்டனர். உடமைகளில் எதுவும் சிக்காத நிலையில், அவர்களை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

    இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட் தனியார் கைக்கு போகிறதா..? மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

    அப்போது, இரு பயணிகளும் தங்களது ஆசனவாய்ப் பகுதியில் ஓவல் வடிவ கேப்சூல் உருளைகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 6 கேப்சூல்களைத் திறந்து பார்த்தபோது, அதில் 1.65 கிலோ எடையுள்ள 24 கேரட் சுத்தமான தங்கப் பசை இருப்பது உறுதியானது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் ₹2.10 கோடியாகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், கடத்தல் பயணிகளான இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சர்வதேசத் தங்கக் கடத்தல் கும்பல் இவர்களைக் 'கடத்தல் குருவிகளாக' பயன்படுத்திச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்ததும், அங்கு தங்கப் பசையைப் பெற்றுக்கொண்டு சென்னைக்குக் கடத்தி வந்ததும் அம்பலமானது.

    இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கியக் கடத்தல் புள்ளிகள் யார், இவர்கள் ஏற்கனவே இதுபோன்று கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: 845 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: ஏடிசி தின விழாவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு
    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா
    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    இந்தியா
    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share