புதிய கட்டுமானம் அல்லது கட்டட இடிபாடுகள் மேற்கொண்டால் ஆறு மீட்டர் உயரத்தில் தகரம் அல்லது உலோக தடுப்புகள் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான அல்லது இடிபாடு பணிகளின் போது தூசி துகள்கள் வெளியே வராத வகையில், நீரை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கட்டுமான தளங்களில் அடிக்கடி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இடிப்பாட்டு கழிவுகளை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களையும் தார்பாலின் கொண்டு மூட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சி... “கோலமாவு கோகிலா” மேயர் பிரியாவால் கொந்தளிக்கும் மக்கள்..!

வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை எனில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் மேயர் பிரியா; மேலிடம் வரை சென்ற விவகாரம்..!