கோவை, ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்தடைந்தார். கோவை வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே என் நேரு, டி.ஆர்.பி ராஜா, சாமிநாதன், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க முதல்வருக்கு திமுகவினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து செல்லும் வழிநெடுக காத்திருந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சென்ற அவர் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி அருகில் இருந்து புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பயணம் செய்து செம்மொழி பூங்கா திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.
இதையும் படிங்க: 10 வழித்தடங்களில் ஃப்ளைட் கேன்சல்!! ஏர் இந்தியா அறிவிப்பு! மும்பை, டெல்லி, சென்னை, துபாய் பயணிகள் அவதி!
செம்மொழி பூங்கா திறப்பு:
கோவை மத்திய சிறை மைதானத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.214.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். செம்மொழி பூங்கா கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் அறிவிக்கபட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 18- 12 -2023 அன்று செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை பகுதியில், 165.00 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கவும், தற்போது முதல் கட்டமாக 45.00 ஏக்கர் நிலப்பரப்பில் 208.50 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டது. தற்போது, 97.04 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு, அடையாளங்கள், சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் போன்றவை, ரூ8.13 கோடி மதிப்பீட்டில் உக்கடம் கழிவுநீர் சுகர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பங்கு அவர்கள் எடுத்து வருதல், ரூ7.30 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா வளாகத்தில் தலை தர வாகனம் நிறுத்தும் இடம் கட்டுதல், ரூ20.14 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா வளாகத்தில் நிலத்தடி நீர் தொட்டி கட்டுதல் மழைநீர் வடிகால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் அமைத்தல், ரூ22.36 கோடியில் கோயம்புத்தூர் மாநகராட்சி செம்மொழி பூங்காவிற்கு கூடுதல் அபிவிருத்தி பணிகள், ரூ3.56 கோடியில் கோவை மாநகராட்சி செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தரைதல வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதல் அபிவிருத்தி பணிகள் என ரூ158.59 கோடியில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
பூங்காவின் சிறப்புகள்:
- உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம், மணம் தமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத் தோட்டம், ரோஜா தோட்டம் மற்றும் பசுமை வனம் போன்ற 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளன. 2000 மேற்பட்ட ரோஜா வகைகள், ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- செம்மொழி பூங்கா வளாகத்தில் நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மைய கட்டிடம், 500 பேர் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு என பிரத்தியேகத் தோட்டக்காரர்கள் அறை, உணவகம், ஒப்பனை அரை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் மற்றும் பல முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது.
- செம்மொழி பூங்கா வளாகத்தில் தரைதள வாகன நிறுத்தும் இடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- செம்மொழி பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.
- செம்மொழி பூங்கா வளாகத்தில் மக்கள் எளிதாக நடைபெற்று மேற்கொள்வதற்கு ஏதுவாக இயற்கை முறையில் நடைபாதை தரை மற்றும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- செம்மொழி பூங்கா வளாகத்தில் மகளிர் சுய உதவி குழு கொடுக்கலாம் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக "மதி அங்காடி" நிறுவப்பட்டுள்ளது.
- உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
- செம்மொழிப் பூங்கா வளாகத்தில் உள் வன மாதிரி கண்காட்சி அமைப்பு 4000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
- செம்மொழி பூங்கா வளாகத்தினால் குழந்தைகள் விளையாடுவதற்கு என 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரத்தியேகமாக விளையாட்டுத்துறல் அமைக்கப்பட்டுள்ளது
- செம்மொழி பூங்கா வளாகத்தனுள் மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேகமாக விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளது.
- செம்மொழி பூங்காவனத்தில் கட்டமைக்கப்பட்ட வரும் நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டிடத்தில் பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியம் மற்றும் தாவரங்கள் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் சிறுவர்களுக்கான உள் விளையாட்டு அறை மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் இளம் வயதினர் படிப்பதற்கு ஏதுவாக பிரத்தியேக படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது
- செம்மொழிப் பூங்கா வளாகத்தில் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வண்டிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது
- செம்மொழி பூங்காவளாகத்தில் நடப்படும் மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இப்பெயர் பலகைகளில் qr குறியீடுகள், வருடிகளால் முன்னறிவு நகர் பேசிகள் போன்ற தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இப்பூங்க வளாகத்தில் கடையெழு வள்ளல்களின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசுப்பணிக்கு ரூ.15 லட்சம் லஞ்சம்!! வாரி சுருட்ட பாக்குறீங்களா? வெளுத்து வாங்கும் அண்ணாமலை!