மதுரை மாநகர திமுகவில் முக்கிய பிரமுகராக அறியப்பட்டவர் பொன் வசந்த். இவர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் ஆவார். பொன் வசந்த், மதுரை மாநகராட்சியின் விவகாரங்களில் அடிக்கடி தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அக்கட்சியின் உறுப்பினர்களாலேயே அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார்.

மேலும், மதுரை மேற்குத் தொகுதியின் வேட்பாளராக தன்னையே கட்சி நிறுத்தவுள்ளதாகவும், இந்த தொகுதியில் அமைச்சர் மூர்த்தி சரியாக செயல்படவில்லை எனவும் அவர் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்வசந்த் செல்பேசியில் பேசிய ஆடியோ ஒன்று தலைமைக்குச் சென்றதால், அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: முதல்வரின் விசிட்.. திருவாரூர் மக்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கு! தயாரா இருங்க..!

இதுக்குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், மதுரை மாநகர் மாவட்டம், 57வது வார்டைச் சேர்ந்த பொன்வசந்த் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாநகரில் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடனான ஒன்-டூ-ஒன் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின்போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை.. ஆணவத்தை நீடிக்க விட மாட்டோம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கு!!