சென்னையில் பல்வேறு இடங்களில் குறைந்த செலவில் மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வகையில் திருமணம் மாளிகைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூரில் உள்ள திருவிக நகர் பகுதியில் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
இந்தத் திருமண மாளிகை, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை மெட்ராபொலிட்டன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி சார்பில் கட்டப்பட்டு உள்ளது. பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலை அருகே அமைந்துள்ள இந்த மண்டபம், சுமார் 30,000 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இது சமுதாய நலக்கூடமாகவும், குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் திருமணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தில் குளிர்சாதன வசதி, பார்க்கிங் இடம், உணவு அரங்கு மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மாளிகையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தத் திருமண மாளிகை திறக்கப்படுவதன் மூலம், பெரம்பூர் மற்றும் திரு.வி.க. நகர் பகுதி மக்களுக்கு மலிவு விலையில் தரமான திருமண வசதிகள் கிடைக்கும்.
இதையும் படிங்க: ஆண்டுதோறும் கட்டண கொள்ளை... வாட்டி வதைக்கும் வசூல் வேட்டை..! TTV தினகரன் காட்டம்..!
இது சமூக சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து 10 இணையர்களுக்கு முதல்வர் திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தான் நம்பர் 1..! டவுட் இருந்தா மத்திய அரசையே கேளுங்க..! ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!