தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சித்தனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது. 2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே.

இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறிய நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் புதுமுகங்கள்... MLA- களுக்கு SPECIAL TRAINING..! தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!
கூட்டுறவு வங்கிகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 50,000 ரூபாய் வரை தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் பயிர் கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து இரண்டு கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!