டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நிதி ஆயோக் ஆளும் குழு 11வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த முக்கிய கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கிறார். இது அவரது முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு இரண்டாவது அதிகாரபூர்வ பயணமாகும்.
மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் விஜய், தமிழ்நாடு இல்லத்தில் அரசு முறைப்படி வரவேற்பு பெற்றார். பயணத்தின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசினார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தினார். இந்த பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டத்தின் மையக்கரு “Viksit Bharat @2047. இது நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது: அடிப்படை மனித மூலதனம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் மேம்பாடு, உற்பத்தித்திறன் வேலைவாய்ப்பு, தொழில்முயற்சி மற்றும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன், மற்றும் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் மரியாதை. மாநிலங்களின் திட்டங்களை தேசிய இலக்குகளுடன் ஒருங்கிணைப்பது, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முயற்சி ஊக்குவிப்பு போன்றவை முக்கிய விவாதப் பொருள்களாக இருக்கும்.
இதையும் படிங்க: டெல்லிக்கு டைரக்ட் VISIT..!! துணை குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் விஜய்..!!
முதல்வர் விஜய் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் முக்கிய வளர்ச்சி பிரச்சினைகள், உள்கட்டமைப்பு தேவைகள், நலத்திட்டங்கள், மத்திய அரசின் நிதி உதவி அதிகரிப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைக்க உள்ளார். தலைமைச் செயலர் எம். சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அவருடன் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தான் விஜய்..! விளாசிய அப்பாவு..!!