தமிழக சட்டப்பேரவையில் இன்றுப்ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் இறுதியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதிலுரை அளித்தபோது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவெக தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையேயான அரசியல் பதற்றத்தை பிரதிபலிக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் விவாதம் நடைபெற்றது. இன்று முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஊழல், மின்வெட்டு, கோவில் நிர்வாக சீர்கேடு, என பல விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். எதிர்க்கட்சிகளை பந்தாடிய முதல்வர் விஜய் கொளத்தூர் தொகுதியை குறிப்பிட்டு பேசினார். ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூர் தொகுதி ஆட்டம் கண்டதாக கூறியுள்ள முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் கைசைகையை செய்து காண்பித்தார். அது மட்டுமல்லாது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று கூறி பேசி இருந்தார்.
இதையும் படிங்க: பணியிட மாறுதலுக்கு லஞ்சம்? திராவிட கட்சிகளின் நடைமுறைக்கு வேட்டு! தவெக அதிரடி துவக்கம்!
முதல்வர் விஜய் பேசப்பேச கொந்தளித்த திமுகவினர் ஒரு கட்டத்தில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் தற்போது வரை கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் பட்டியலிட்டு பேச இருந்தார். சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதை சுட்டிக்காட்டி அமைச்சர் அருண் ராஜ் கருத்து தெரிவித்தார். நரிகளுக்கு எதிராக நமது ஜனநாயகரின் தெறி பேச்சு என்று குறிப்பிட்டார். முதல்வருக்கு பேசத் தெரியாதா என்று பேட்ச் அணிந்து வந்தவர்கள் முதல்வர் பேச ஆரம்பித்ததும் தங்கள் வேஷங்கள் கலைந்ததால் எதிர்ப் பேச்சின்றி ஓடினார்கள் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தரமான சம்பவத்தை செய்ததாக கூறினார்.
இதையும் படிங்க: முட்டுக்காட்டில் புதிய சட்டசபை! முதல்வர் விஜய் முடிவு? கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு குறி!