நார்வே செஸ் தொடர் மே 25 முதல் ஜூன் 5 வரை ஒஸ்லோவில் நடைபெற்றது. 10 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் பிரக்ஞானந்தா 18/30 புள்ளிகளுடன் சாம்பியனாக உயர்ந்தார். கடைசி சுற்றில் வின்சென்ட் கெய்மருக்கு எதிராக வெற்றி பெற்று பட்டத்தை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் நான்கு கிளாசிக்கல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாதனையையும் படைத்தார்.
மிக முக்கியமான சாதனையாக, உலகின் நம்பர் 1 வீரரும் நார்வேயின் செஸ் லெஜண்டுமான மாக்னஸ் கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை தோற்கடித்துள்ளார். மூன்றாவது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், எட்டாவது சுற்றில் கருப்பு நிறக் காய்களுடனும் அவரை வீழ்த்தியது உலக செஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு தொடரில் கார்ல்சனை இருமுறை கிளாசிக்கல் ஆட்டத்தில் தோற்கடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார்.
இதையும் படிங்க: "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!
முதல்வர் விஜயை சந்தித்த பிறகு பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செஸ் போர்டு எடுத்து வரச் சொல்லி தன்னுடன் முதலமைச்சர் விஜய் விளையாடியதாக தெரிவித்தார். முதல்வர் இப்படி செஸ் விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி தனக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து தொடர் அவதூறு..! YouTuber மாரிதாஸ் கைது..!!