கோவையில் நடைபெற்ற சாலை வலத்தின் போது நடந்த ஒரு சம்பவம் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மனிதாபிமானப் பக்கத்தை மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளது. பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் கோவை நகரில் சாலை வலம் மேற்கொண்டார். அப்போது வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் ஒரு சிறு பெண் குழந்தையின் பெற்றோர் உதவி கோரி ஒரு போஸ்டரை ஏந்தியபடி நின்று கொண்டிருந்தனர்.
அந்தப் போஸ்டரில் “Help for ARUDHRA” என்ற வாசகமும், குழந்தையின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன. ஆருத்ரா என்ற அந்தச் சிறுமி தண்டுவட தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாமல் பெற்றோர் தவித்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரின் உதவியை வேண்டி அந்தப் போஸ்டரை ஏந்தியபடி சாலை வலப் பாதையில் காத்திருந்தனர்.முதலமைச்சர் விஜய்யின் வாகனம் அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது, அந்தப் போஸ்டரை அவர் கவனித்தார். உடனே வாகனத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

சுற்றுமுற்றும் இருந்த பாதுகாப்புப் படையினரும் தொண்டர்களும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, முதலமைச்சர் அந்தப் போஸ்டரை வாங்கிக்கொண்டார். குழந்தையின் பெற்றோரிடம் செல்போன் எண்ணைக் கேட்டு, அந்த எண்ணைப் போஸ்டரின் பின்பக்கத்தில் எழுதினார். பின்னர் அதை தனது உதவியாளரிடம் ஒப்படைத்து, “இதைப் பார்த்து உதவி செய்யுங்கள்” என்று அறிவுறுத்தினார்.அப்போது பெற்றோரிடம் நேரடியாகப் பேசிய முதலமைச்சர், “கவலைப்படாதீங்க. ஆருத்ரா பாப்பாவை நான் பாத்துக்குறேன். என்னால முடிஞ்சத எல்லாம் செய்யுறேன்” என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளுங்கள்.. சிஜேபி போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் வார்னிங்!!
அவரது இந்த வார்த்தைகளும் செயலும் அந்தப் பெற்றோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. குழந்தையின் தாய் பின்னர் பேட்டி அளிக்கையில், “முதலமைச்சரே வாகனத்தை நிறுத்தி எங்களிடம் பேசினார். என்னால முடிஞ்சத செய்யுறேன்னு சொல்லியிருக்காரு. அவரது அந்த உத்தரவாதம் எங்களுக்கு பெரிய ஆறுதல் அளித்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இந்தச் சம்பவம் சாலை வலத்தில் பங்கேற்ற மக்களிடையே பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் முதலமைச்சரின் இந்தச் செயலைப் பாராட்டினர்.
இதையும் படிங்க: மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பது அரசமைப்புக்கு எதிரானது! சிபிஐ வீரபாண்டியன் ஆவேசம்!