ஊரக வளர்ச்சித் துறையின் திட்டங்கள் தகுதியான அனைத்து பயனாளிகளையும் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். திட்டங்கள் சிலரை மட்டுமே சென்றடைந்து பலரை விட்டுச் செல்வதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முதல்வர், “ஒவ்வொரு திட்டமும் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தகுதியான எவரும் திட்டங்களிலிருந்து விலக்கப்படக்கூடாது” என்று வலியுறுத்தினார்.மேலும், திட்டங்கள் பயனாளிகளை முழுமையாகச் சென்றடைகின்றனவா என அவ்வப்போது கள ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டார்.

மாவட்ட நிர்வாகங்கள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் கிராமப்புற அமைப்புகள் இணைந்து இந்தப் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.ஊரகப் பகுதிகளில் வறுமை ஒழிப்பு, வீட்டு வசதி, சாலை வசதி, குடிநீர் திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவை அனைத்து தகுதியான குடும்பங்களுக்கும் சரியாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்.
இதையும் படிங்க: "தமிழ் மக்களின் நீங்கா நினைவு"..! கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்... தமிழ்நாடு அரசு மரியாதை..!!
இந்த உத்தரவு ஊரக வளர்ச்சித் துறையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்று பலரும் வரவேற்றுள்ளனர். திட்ட அமலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் விசில் புரட்சி..! அனைத்தும் அனைவருக்கும்... சட்டசபையில் ஆளுநர் உரை..!!