தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் அலை ஒன்றை உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கரூருக்கு செல்கிறார். இது கடந்த ஆண்டு ஏற்பட்ட சோக சம்பவத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாக உரையாடும் உணர்ச்சிபூர்வமான தருணமாகவும் அமைந்துள்ளது.
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தேவக் நடத்திய பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல் இருந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தப் பின்னணியில் இன்றைய கரூர் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. முதல்வராக முதல் முறையாக அவர் கரூருக்குச் செல்கிறார். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் அரசு பணி வழங்க உள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு அரசு பணி வழங்குவதற்கு தடை இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: #BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!
இது முதல்வர் விஜய்க்கு சாதகமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தனி விமான மூலம் முதல்வர் விஜய் சென்றார். பிறகு சாலை மார்க்கமாக கருவூருக்கு செல்கிறார். முதல்வர் விஜய்யை கண்டதும் பூக்களை தூவி மக்கள் வரவேற்றனர். வழி நெடுகிலும் காத்திருந்த மக்களால் சாலை ஸ்தம்பித்தது. அரச நிகழ்ச்சி மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிலையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரீல்ஸ் போட்டாலே ACTION எடுக்குறாங்க..! விஜய் ஆட்சி... புகழ்ந்து தள்ளிய பெண்கள்.!!