தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கிய தமிழக வெற்றி கழகம் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் பெண் எம்எல்ஏக்களின் கதைகள் பலரையும் ஊக்கப்படுத்தியுள்ளன. அவற்றில் மிகவும் உத்வேகமூட்டும் ஒன்று சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எம்.ஆர். பல்லவியின் கதை. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அவர், தேர்தலில் மிகவும் கவனத்தை ஈர்த்த பெண். 36 வயதான எம்.ஆர். பல்லவி, தவெகவில் இணைந்து திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த அவரது உழைப்பு பலரையும் வியக்க வைத்தது. ஒரு முறை பிரசாரத்தின்போது மயக்கமடைந்தபோதும், சிகிச்சைக்குப் பின் மீண்டும் களத்தில் இறங்கியதாக அவரது கணவர் தெரிவித்திருந்தார். அந்த உறுதியான முயற்சியின் பலனாக, திமுக வேட்பாளர் கே.எஸ். ரவிச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பல்லவி வெற்றி பெற்றார்.

வெற்றிக்குப் பிறகு பல்லவி தனது எதிர்காலத் திட்டத்தை உணர்ச்சிபூர்வமாக அறிவித்தார். தனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு 'தமிழ் வெற்றி கொண்டான்' என்று பெயர் சூட்டப் போவதாக அவர் கூறினார். இது தவெக கட்சியின் பெயரையும், முதலமைச்சர் விஜய்யின் மீதான தனது பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததும், அந்தப் பெயரை உறுதி செய்தார். கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் இந்தப் பெயர் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!
இன்று சட்டப்பேரவை வளாகத்தில் இந்த மகிழ்ச்சியான தருணம் உச்சம் பெற்றது. கைக்குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த பல்லவியை முதலமைச்சர் விஜய் அன்புடன் வரவேற்றார். குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு கொஞ்சிய அவர், "தமிழ் வெற்றி கொண்டான்" என்று பெயர் சூட்டினார். இந்தக் காட்சி உணர்ச்சிகரமாக இருந்தது. பல்லவியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பெயர் சூட்டியதில் அவர் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வு தவெகவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தினமும் 2 விவசாயிகள் தற்கொலை"..! பயிர்க்கடன் தள்ளுபடி அவசியம்... சவுமியா அன்புமணி வலியுறுத்தல்..!!