சேலம் - எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண் என்கிற அருணாச்சலம்(21). இவரது பள்ளி தோழி (பெயர் இல்லை). இவர்கள் இருவரும் தங்களது 6-ம் வகுப்பு பள்ளிப்படிப்பு முதல் ஒன்றாக படித்தும், நண்பர்களாக பழகியும் வந்துள்ளனர்.
இந்நிலையில் அருணாச்சலத்தின் தோழி தனது கல்லூரி படிப்பிற்காக சேலத்தில் இருந்து கோவை மாவட்ட பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் படிக்க பல மாதங்களுக்கு முன் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி தனது கல்லூரி படிப்பை படித்து வருகிறார். இதில் அருணாச்சலமும் அவரது தோழியும் தொடர்ந்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது படிப்பு செலவிற்காக பள்ளி தோழி, அருணாச்சலத்திடம் பணம் கேட்டுள்ளார். அருணாச்சலம் என்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு, பள்ளி தோழியிடம் இருந்த 2 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு, அதை ஏதாவது ஒரு தனியார் தங்க நகை கடன் நிறுவனத்தில் வைத்து பணத்தை புரட்டித் தருகிறேன் என்று ஆறுதலாக கூறி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!
இந்நிலையில் பள்ளி தோழி தனக்கு பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தினமும் அருணாச்சலத்தை தொடர்பு கொண்டு கேட்டு வந்துள்ளார். இதில் அருணாச்சலம் பல்வேறு சாக்குப் போக்குகளை கூறி வந்த நிலையில் இறுதியாக அருணாச்சலம் தனது பள்ளி தோழியின் கேள்விக்கு பதில் கூற முடியாமல், மழுப்பல் பதிலாக தங்க நகை கடன் நிறுவனம் எனது வங்கிக் கணக்கில் ரொக்கத்தை வரவு வைத்து விட்டது.
இருப்பினும் அதே சமயத்தில் எனது இருசக்கர வாகனத்திற்கான கடன் தேதியும் அதே சமயத்தில் வந்து விட்டது. இதனால் அந்த பணத்தை எனது வங்கி பைக் கடன் இஎம்ஐ-க்காக எடுத்து விட்டது. என்னிடமும் பணம் இல்லை என கூறிய நிலையில், தனது பள்ளி தோழிக்கு உதவுவது போல் முன்வந்த அருணாச்சலம் சேலம் பகுதியில் உள்ள தனது நண்பன் சந்தோஷ் இடம் நீ கேட்டுப்பார். அவன் சேலத்தில் பைனான்ஸ் தொழில் தான் செய்து வருகின்றான் அவனிடம் பணம் உள்ளது. அவன் கொடுத்து உதவுவான் என்று தனது பள்ளி தோழியிடம் அருணாச்சலம் கூறிவிட்டு, சந்தோஷின் செல்போன் நம்பரை பள்ளி தோழிக்கு கொடுததுள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட அருணாச்சலத்தின் பள்ளி தோழி, சேலத்தில் உள்ள பைனான்சியர் சந்தோஷுற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது பண தேவையை சொல்லி அவனிடம் பண உதவி கேட்டுள்ளார்.
அதற்கு சந்தோஷ் வீடியோ காலில் என்னை தொடர்பு கொண்டு பேசு அப்போது உனக்கு பணம் தருவேன் என்று கூறியுள்ளார். பணம் உடனடியாக தேவை என்பதால் அருணாச்சலத்தின் பள்ளி தோழி சந்தோஷ் சொல்வதற்கெல்லாம் வேறு வழி இன்றி ஒப்புக்கொண்டார். பின்னர் வீடியோ கால் பேசும்போது அதை ஆபாச வீடியோவாக ரெக்கார்ட் செய்த சந்தோஷ் தனது நண்பர் அருணாச்சலத்திற்கு தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் இணைந்து தோழியை மிரட்டி அவரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பெற துவங்கினர்.
மேலும் அருணாச்சலத்தின் தோழயிடம் வீடியோ காலில் ரெக்கார்டு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்டு விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்ததால் அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து கோவில்பாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருச்சியில் அதிபயங்கரம்... மது ஊற்றிக் கொடுத்து 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...!