நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள அக்கையாபாலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர், மைசூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நீலகிரி மாவட்டம் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்தகோபாலம் பாலம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம் எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 22 பேரில் 14 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காயமடைந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குன்னூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!