நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும் இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான போதிய எம்எல்ஏக்கள் இல்லை.
இந்த சூழவில் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார். அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இன்று இரண்டாவது முறையாக ஆளுநரை விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, CPI, CPM உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகம் கடிதம் எழுதியது. ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள் நெருங்கியாச்சு..! காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை ஒத்தி வைக்கணும்..! சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!!
இந்த நிலையில் சிபிஎம் தேசிய செயலாளர் M.A. பேபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சியமைக்க விஜயை ஆளுநர் அழைக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று கூறி உள்ளார். ஆளுநர் ஜனநாயக மரபுகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் எங்கள் கட்சி திமுக கூட்டணியில் ஒரு பகுதியாக உள்ளது என்றும் தவெகவுக்கு ஆதரவு தருவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!