கடலூர் அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உரிய ஆவணங்களுடன் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி நேரில் ஆஜராக கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் உத்தரவிட்டுருந்தார் . இன்று அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பேச்சு வார்த்தை நடைபெற இருந்த நிலையில் , இருதரப்பினர் இடையே மோதல்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு
கடலூர் மஞ்சகுப்பம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ,புதுநகர் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத்தின் தரப்பினர் இன்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைத்து சென்று விட்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எம்.சி. தாமோதரன் தலைமையில் மாநகர செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் உள்பட அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். கடலூர் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியை மாவட்ட செயலாளர் எம்.சி. தாமோதரனிடம் ஒப்படைத்தார்.

கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியைப் பெற்று கொண்டு , மாவட்டச் செயலாளர் தலைமையில் தொண்டர்கள் அலுவலகத்திற்குச் சென்று உற்சாகமாக கதவை திறந்தனர். கதவைத் திறந்து பார்த்தபோது அலுவலகம் முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனைக் கண்டு மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபோது மின்விசிறி , கம்ப்யூட்டர் , பால் சீலிங் , மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அகற்றப்பட்டு காலி கூடாரமாக அதிமுக கட்சி அலுவலகம் இருந்தது.

இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி தற்கொலை..! மகேந்திரனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!!
கடலூரில் பரபரப்பு ஏற்படுத்திய அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிமுகவிற்கு சொந்தம் என்று சாவியை ஒப்படைத்து சென்று இருந்த நிலையில் அலுவலகம் சூறையாடப்பட்டிருந்ததை மாவட்ட செயலாளர் அதிர்ச்சியுடன் பார்த்து அவர்கள் செய்தது போல் அதிமுக தொண்டர்கள் எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது. முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ச.சம்பத்
அரசியல் நாகரிகமற்ற செயலை செய்துள்ளார். அவர் எந்த அரசியல் பயணம் மேற்கொண்டாலும் , அவர் செய்த செயல் அரசியல் நாகரீகம் அற்ற செயலாகும் , விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அலுவலகத்தை ஒப்படைத்த நபர்கள் எந்தவிதமான பொருள்களையும் சேதப்படுத்த வில்லை , அலுவலகம் எப்படி இருந்ததோ அப்படியே ஒப்படைத்துச் சென்று விட்டனர்.
கழகக் கோயிலான நமது கட்சி அலுவலகத்தை கழகத் தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர் சிதைப்பது எவ்வகையில் நியாயம்😢😢😢
கழகத் தொண்டர்களே முடிவு உங்கள் கையில்🙏🙏🙏
இடம்- கடலூர் வடக்கு மாவட்டக் கழக அலுவலகம், பாதிரிகுப்பம்...#அதிமுக_கடலூர்_வடக்கு_மாவட்டம் #அதிமுக_கடலூர்_மாநகரம் pic.twitter.com/QOB2sXL6am
— Dhanasekaran Rajendran (@Dhanasekar61890) June 1, 2026
ஆனால் கடலூர் அதிமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்டு சாவி ஒப்படைத்து உள்ளார்கள். நாங்கள் நினைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் இருந்தாலும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அவர் சொல்லுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். தொண்டர்கள் கட்சி அலுவலகத்தை புதுப்பிக்கும் பணியில் செயல்பட வேண்டும் மிக விரைவில் அலுவலகத்தை புதுப்பித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் கடலூரில் அதிமுக அலுவலகத்தை மிக விரைவில் திறப்பு விழா வைப்பதாக கடலூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.தாமோதரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!