தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சமீப காலமாக துறையில் காலிப் பணியிடங்கள் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். இது அரசியல் வட்டாரங்களிலும், சுகாதாரத் துறை சார்ந்த அமைப்புகளிலும் குறிப்பிடத்தக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2025 நவம்பர் மாத இறுதியில் அமைச்சர் மீண்டும் இதை வலியுறுத்திய போது, செவிலியர்கள் சங்கங்கள் இதை மறுத்து எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே, மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலி பணி இடங்களே இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொய் சொல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏராளமான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் காலி பணியிடங்களை இல்லை என மா. சுப்பிரமணியன் பொய் சொல்வதாக தெரிவித்தார். முழு பூசணிக்காயை தட்டு சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல் பொய் சொல்லி இருக்கிறார் மா சுப்பிரமணியன் என்றும் குற்றம் சாட்டினார். அரசு மருத்துவமனைகளையே நம்பி உள்ள ஏழு எளிய மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். தமிழக சுகாதாரத் துறையில் போதிய மருத்துவர்கள் இல்லாமலும் பல மருத்துவப் பணி இடங்கள் காலியாகவும் உள்ளது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு உறுதுணை செங்கோட்டையன்... பதவிகளை வாரிவழங்கி விஜய் அறிவிப்பு...!
கடந்த 55 மாதத்தில் ஓர் இரண்டு தீர்வுகளை மட்டுமே நடத்திவிட்டு கும்பகர்ண தூக்கத்தில் மருத்துவ பணிகாலர் தேர்வாணையம் இருப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தன்னுடைய துறையான சுகாதாரத் துறையை கவனிப்பதை தவிர மற்ற எல்லா வேலையையும் மா.சுப்பிரமணியன் செய்கிறார் என்றும் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்
.
இதையும் படிங்க: #BREAKING: தவெக துண்டை தோளில் தாங்கிய செங்கோட்டையன்… முகமலர்ச்சியுடன் வரவேற்ற விஜய்…!